8th Pay Commission: DA, TA, HRA, பிற அலவன்சுகளில் அதிரடி ஏற்றம்... மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களைத் திருத்தும் பொருட்டு, மத்திய அரசு விரைவில் அடுத்த ஊதியக் குழுவின் பரிந்துரைகளை 2026 ஜனவரி 1 முதல் அமல்படுத்தும் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக, இரண்டு ஊதியக் கமிஷன்களுக்கு இடையே சுமார் 10 ஆண்டுகள் இடைவெளி இருக்கும். 7வது ஊதியக் குழுவின் 10 ஆண்டுகால அளவு டிசம்பர் 31, 2025 உடன் முடிவடையும் நிலையில், அடுத்த உதியக்குழுவின் அறிவிப்புக்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது.
தற்போது 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு வெளிவந்தால்தான், 2026 -இல் அது அமலுக்கு வர முடியும். ஊதியக்குழுவை அமல்படுத்த தேவையான நடவைக்கைகளை எடுக்க 1 1/2 முதல் 2 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகின்றது. ஆகையால் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம், அலவன்ஸுகள் மற்றும் ஓய்வூதியப் பலன்களை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கும் 8வது ஊதியக் குழுவை மத்திய அரசு விரைவில் அமைக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
8வது ஊதிய கமிஷனில் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.57 இல் இருந்து 3.68 ஆக உயர்த்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக மத்திய அரசை கோரி வருகின்றனர். அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களைக் கணக்கிடுவதற்கான பொதுவான பெருக்கல் எண்தான் ஃபிட்மென்ட் ஃபாக்டர். உதாரணமாக, 6வது மத்திய ஊதியக் குழுவின் ஊதிய அளவுகளை 7வது ஊதியக் குழுவுக்கு மாற்றியமைக்க 2.57 ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பயன்படுத்தப்பட்டது.
6வது சம்பள கமிஷனில் 1.86 ஃபிட்மென்ட் ஃபாக்டர் பரிந்துரைக்கப்பட்டது. 7வது சம்பள கமிஷன் அனைத்து ஊழியர்களுக்கும் பொதுவான ஃபிட்மென்ட் ஃபாக்டராக 2.57ஐ பரிந்துரைத்தது. இந்த ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் மாதம் ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இது இதற்கு முன்னர் ரூ.7,000 ஆக இருந்தது. தற்போது ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.57ல் இருந்து 3.68 ஆக உயர்த்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
8வது ஊதியக் குழு அமலுக்கு வந்து, இதில், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.68 ஆக உயர்த்தப்பட்டால், 18 ஊதிய மேட்ரிக்ஸ் நிலைகளில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பில் நல்ல ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக, பே மேட்ரிக்ஸ் லெவல் 1 ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 7வது ஊதியக்குழுவின் ரூ.18,000 இலிருந்து 8வது ஊதியக்குழுவில் ரூ.21,600 ஆக உயரக்கூடும். அதிகபட்ச ஊதியமாக, பே மேட்ரிக்ஸ் லெவல் 18ல் உள்ள ஊழியர்களுக்கு, அடிப்படை சம்பளம் ரூ.2,50,000 இல் இருந்து ரூ.3,00,000 ஆக உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
8வது ஊதியக் குழுவின் கீழ், அகவிலைப்படி (Dearness Allowance), வீட்டு வாடகை கொடுப்பனவு (House Rent Allowance) மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவு (TA) போன்ற பல்வேறு சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகளில் மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டவுடன், பணவீக்கம் மற்றும் தினசரி வாழ்க்கைச் செலவுகளில் ஏற்படும் மாற்றங்களை சமாளிக்கும் வகையில் இந்த அலவன்சுகளும் மாற்றி அமைக்கப்படும்.
8வது ஊதியக் குழுவை அமைப்பது குறித்து இன்னும் அரசாங்கம் எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. கடந்த ஆண்டு, 8வது ஊதியக்குழுவை அமல்படுத்துவதற்கான எந்த எண்ணமும் இப்போது இல்லை என நிதிச் செயலர் கூறியிருந்தார். அதற்கு பிறகு அரசு தரப்பிலிருந்து இது குறித்து எந்த வித அப்டேட்டும் இனி வரவில்லை. எனினும் பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பு வரக்கூடும் என கூறப்படுகின்றது.
8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டு அமலுக்கு வந்தால், சுமார் 67.85 லட்சம் ஓய்வூதியதாரர்களும், 48.62 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் பயனடைவார்கள் என கூறப்படுகின்றது. இதன் மூலம் அடிப்படை ஊதியம் மற்றும் பிற அலவன்சுகளிலும் மாபெரும் ஏற்றம் இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.