அழகு சாதன பிராண்டிற்கு அதிபதியான நயன்! 9ஸ்கின் ஆரம்ப விலை என்ன தெரியுமா?

Sat, 30 Sep 2023-11:09 am,

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நயன்தாரா, 9ஸ்கின் என்ற அழகு சாதன பிராண்டை உருவாக்கியுள்ளார். 

இது குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில், நேற்று 9ஸ்கின் பிராண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. 

இயக்குநரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன், இந்த பிராண்டில் ஒரு பங்கு தாரராக இருக்கிறார். 

விக்னேஷ் சிவன் நேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், அவர் தனது மனைவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் 9ஸ்கின் பிராண்டின் பொருட்கள் கிடைக்கும் என்றும் தனது பதிவில் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார். 

9ஸ்கின் பிராண்டின் அறிமுக விழா மலேசியா கோலாலம்பூரில் நடந்தது. இதில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கலந்து கொண்டனர். 

9ஸ்கின் பிராண்டில் இரண்டு வகையான சீரம், இரண்டு வகையான கிரீம் மற்றும் ஒரு எண்ணெய் ஆகிய பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் ஆரம்ப விலை ரூ.999ஆக உள்ளது, அதிகபட்சம் ரூ.1,899ஆக உள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link