Aadhaar Update: இனி வீட்டில் இருந்தபடியே இந்த வசதியை பெறலாம், விவரம் உள்ளே

Thu, 22 Jul 2021-5:59 pm,

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (IPPB) மற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI) ஆகியவை ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு, வீட்டில் இருந்தபடியே மொபைல் எண்ணை புதுப்பிக்க வசதியாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் கீழ், தபால்காரர்கள் வீட்டிற்கே வந்து ஆதார் அட்டையின் மொபைல் எண்ணை புதுப்பிப்பார்கள்.

வீட்டிற்கே வந்து ஆதாரில் மொபைல் எண்ணை புதுப்பிக்கும் வசதி ஒரு பரந்த நெட்வொர்க் மூலம் சாத்தியமாகும். இந்த சேவை 650 இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் (ஐபிபிபி) இணைப்பு, 1.46 லட்சம் தபால்காரர்கள் மற்றும் கிராமின் டாக் சேவகர்கள் (ஜிடிஎஸ்) நெட்வொர்க் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும். ஐபிபிபி எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜே வெங்கடராமு கூறுகையில், யுஐடிஏஐ-யின் மொபைல் புதுப்பிப்பு சேவை, தபால் நிலையங்கள், தபால்காரர்கள் மற்றும் ஜிடிஎஸ் ஆகியவற்றின் பரந்த நெட்வொர்க் மூலம் வங்கி சேவைகள் கிடைக்காத பகுதிகளிலும் கிடைக்கும் என்றார்.

IPPB தற்போது மொபைல் புதுப்பிப்பு சேவையை மட்டுமே வழங்குகிறது. மிக விரைவில் அதன் நெட்வொர்க் மூலம் குழந்தைகளின் சேர்க்கை சேவையையும் தொடங்கும். யுஐடிஏஐ-yin படி, இந்த ஆண்டு மார்ச் 31 வரை 128.99 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

உங்கள் மொபைல் எண்ணை மாற்றியிருந்தால், நிச்சயமாக அதை ஆதாரில் புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும். எந்தவொரு சரிபார்ப்பு செயல்முறைக்கும் நீங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தினால், உங்கள் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும். இந்த OTP உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடியில் வரும். அத்தகைய சூழ்நிலையில், ஆதாரில் உங்களது பழைய அல்லது தவறான எண் இருந்தால், நீங்கள் நீங்கள் OTP ஐப் பெற முடியாது. ஆகையால் ஆதாரில் உங்கள் மொபைல் எண்ணை புதுப்பிப்பது மிக முக்கியமாகும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link