ஆடி 18 ஸ்பெஷல்! மெய்சிலிர்க்க வைக்கும் அம்மன் திரைப்படங்கள்
பாளையத்தம்மன்: பாளையத்து அம்மன் 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த படமாகும். இந்தப் படத்தை இயக்குநர் இராம நாராயணன் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் பாளையத்து அம்மனாக நடிகை மீனா நடித்திருந்தார். இந்த படத்தின் மற்ற கதாபாத்திரங்களில் ராம்கி, திவ்யா உன்னி சரண் ராஜ் மற்றும் செந்தில் ஆகியோர் நடித்திருந்தனர்.
ராஜகாளியம்மன்: ராஜகாளியம்மன் (Rajakali Amman) 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த படமாகும். ரம்யா கிருஷ்ணன் நடித்த இப்படத்தை ராமநாராயணன் இயக்கியிருந்தார். எஸ். ஏ. ராஜ்குமார் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
கோட்டை மாரியம்மன்: கோட்டை மாரியம்மன் 2002 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படமாகும். கரண் நடித்த இப்படத்தை ராம நாராயணன் இயக்கினார். மேலும் படத்தில் தேவயானியுடன் ரோஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மீண்டும் அம்மன்: அவதாரம் என்கிற தெலுங்கு படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட படம் தான் மீண்டும் அம்மன். இந்த படம் 2014 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ராதிகா குமாரசாமி, பானுப்ரியா ஆகியோர் நடித்து இருந்தனர்.
அம்மன்: அம்மன் திரைப்படம் மிகவும் பிரபலமான அம்மன் திரைபடங்களில் ஒன்றாகும். இதில் சௌந்தர்யா, சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தார். இது ப்ளாக்பஸ்டர் ஹிட் படமாகும்.
படை வீட்டு அம்மன்: படை வீட்டு அம்மன் 2002 ஆம் ஆண்டில் வெளியான படமாகும். இத்திரைப்படத்தில் மீனா, ராம்கி, தேவயானி மற்றும் ரவளி ஆகியோர் நடித்துள்ளனர்.
ஸ்ரீ பண்ணாரி அம்மன்: ஸ்ரீ பண்ணாரி அம்மன் 2002 ஆம் ஆண்டு வெளியான படமாகும். பாரதி கண்ணன் எழுதி இயக்கிய இந்த படத்தில் விஜயசாந்தி, கரண் மற்றும் லயா ஆகியோர் நடித்திருந்தனர். வடிவேலு துணை வேடத்தில் நடித்திருந்தார்.
மூக்குத்தி அம்மன்: மூக்குத்தி அம்மன் (Mookuthi Amman) 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும். இதை என். ஜே. சரவணன் மற்றும் ஆர். ஜே. பாலாஜி ஆகியோர் இயக்கினர். இத்திரைப்படத்தில் ஆர். ஜே. பாலாஜி திரைக்கதையை எழுதியதோடு முன்னணி கதாபாத்திரமாகவும் நடித்து இருந்தார். நயன்தாரா இந்த திரைப்படத்தில் மூக்குத்தி அம்மன் கதாபாத்தில் நடித்து இருந்தார்.