திருமணம் செய்து கொள்ளும் பிரேம்ஜி! பெண் யார் தெரியுமா?

Tue, 02 Jan 2024-6:42 pm,

தமிழ் திரையுலகில் பிரபலமான நகைச்சுவை நடிகர் பிரேம்ஜி அமரன். சில படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார்.  இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் உடன் பிறந்த சகோதரர். 

 

பிரேம்ஜி அவரது சகோதரர் வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து படங்களிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விடுவார்.  

 

மூத்த இயக்குனரும் இசையமைப்பாளருமான கங்கை அமரனின் மகன் தான் பிரேம் ஜி. பிரேம்கிக்கு தற்போது 44 வயதாகிறது, ஆனாலும் இன்னும் திருமணமாகவில்லை. 

 

இந்நிலையில், சமீபத்தில் ​​​​பிரேம் ஜி சமீபத்தில் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.  "புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு எனக்கு திருமணம்" என்று பதிவு செய்துள்ளார்.

 

பிரேம்ஜி நடிப்பில் சமீபத்தில் 'சத்திய சொதனை' என்ற படம் வெளியானது.  மேலும் தளபதி விஜய்யுடன் தற்போது 'The Greatest Of All Time' படத்தில் நடித்து வருகிறார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link