பிஸ்னஸ்.. சொந்தமாக ஓட்டல்கள்.. நடிகர் ஆர்யாவின் சொத்து மதிப்பு!
கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஆர்யா. அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
நான் கடவுள், மதராசபட்டிணம் போன்ற வித்தியாசமான வெற்றி படங்களை கொடுத்துள்ளார் ஆர்யா. இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
நீண்ட நாட்களாக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த ஆர்யா, நடிகை சாயிஷாவை இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த சாயிஷா, பத்து தல படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். தற்போது ஆர்யா சைந்தவ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஆர்யா ஒரு படத்திற்கு 7 முதல் 9 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். ஆர்யாவிற்கு சொந்தமாக ஹோட்டல் உள்ளது. மேலும் பல சொகுசு கார்களையும் வைத்துள்ளார்.