நடிகர், இயக்குனர் சமுத்திரக்கனியின் சொத்து மதிப்பு விவரம்!
தமிழ் சினிமா தொடங்கி தெலுங்கு சினிமா வரை குணசித்திர கதாபாத்திரங்கள், ஹீரோ, வில்லன் என எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பவர் சமுத்திரக்கனி.
தற்போது தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு சினிமாவில் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பல முக்கிய ஹீரோ படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றுள்ளார்.
நடிப்பை தாண்டி பல படங்களை இயக்கியும் உள்ளார் சமுத்திரக்கனி. நாடோடிகள், நிமிர்ந்து நில், அப்பா, வினோதய சித்தம் போன்ற படங்கள் இவரது இயக்கத்தில் வெளியானவை.
இப்படி பல படங்களில் பிசியாக நடித்து வரும் சமுத்திரக்கனியின் சொத்து விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. சமுத்திரக்கனி ஒரு படத்தில் நடிக்க ரூ. 30 முதல் ரூ. 40 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார்.
கார்கள் மீது அதிக பிரியம் கொண்ட சமுத்திரக்கனி ஸ்கார்பியோ, Audi A4, BMW போன்ற சொகுசு கார்களை கார்களை வைத்துள்ளார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.40 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.