43 வயது நடிகர் கருணாகரனுக்கு இவ்வளவு பெரிய மகளா?! வைரலாகும் புகைப்படங்கள்..
சூது கவ்வும் படத்தில், அரசியல்வாதியின் மகனாக நடித்து பிரபலமானவர் கருணாகரன். புது டெல்லியில் பிறந்து, திருச்சியில் வளர்ந்த இவர், இயக்குநர் நளன் குமாரசாமியை சந்தித்த பின்பு பட வாய்ப்புகள் பலவற்றை பெற்றார். இந்த படத்திற்கு முன்னரே பீட்ஸா, கலகலப்பு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
கருணாகரனுக்கு இன்னும் பெரிய கதவை திறந்து விட்டது, யாமிருக்க பயமே திரைப்படமும் ஜிகர்தண்டா படமும்தான். இதையடுத்து தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் காமெடியனாக சேர்ந்து நடித்த இவர், ரஜினியுடன் லிங்கா திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
சினிமா உலகிற்கு வந்த சில நாட்களிலேயே,50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். கடந்த ஆண்டில் மட்டும் இவர் நடித்த 6 திரைப்படங்கள் வெளியானது.
நடிகர் கருணாகரன், தென்றல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
கருணாகரனின் முதல் மகள், மேக்னா என கூறப்படுகிறது. இவர், வெளிநாட்டில் கட்டிடக்கலை படிப்பு பயின்று வந்துள்ளார்.
சமீபத்தில் கருணாகரனின் மகள், ஒரு பதிவை வெளியிட்டார். அதில், அவர் பட்டம் பெற்றுள்ள புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என வாய்பிளந்து வருகின்றனர்.
இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.