Mahesh Babu : அப்பாவை அப்படியே உரித்து வைத்திருக்கும் மகேஷ் பாபுவின் மகன்! வைரல் போட்டோஸ்..

Mon, 27 May 2024-1:34 pm,

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் மகேஷ் பாபுவிற்கு தமிழகத்திலும் பல ஆயிரம் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர், எக்ஸ்பிரஷனே மாற்ற தெரியாதவர் என்று தனது நடிப்பிற்காக விமர்சனம் வாங்கினாலும் இவர் படத்தை திரையரங்கிற்கு சென்று விசிலிடித்து பார்க்க, இவருக்கென்று தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. 

மகேஷ் பாபுவின் நடிப்பில் கடைசியாக குண்டூர் காரம் என்ற படம் வெளியானது. இந்த படத்தை த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கியிருந்தார். இப்படம் பெரிதாக ஹிட் ஆகவில்லை என்றாலும், இதில் வந்த ‘குர்ச்சி மடத்தபெட்டி’ பாடல் வைரலாகி வருகிறது. 

மகேஷ் பாபுவிற்கு 19 ஆண்டுகளுக்கு முன்பு நம்ரதா என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர். 

மகேஷ் பாபுவின் மகள் பெயர் சித்தாரா. இவர், இன்ஸ்டாகிராமில் பல மில்லியன் ஃபாலோவர்ஸ்களை கொண்ட பிரபலங்களுள் ஒருவராக இருக்கிறார். 

மகேஷ் பாபு, தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு குடி பெயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம், அவர் மட்டும் ஐதராபாத்தில் தங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

மகேஷ் பாபு, தனது குடும்பத்தினருடன் சமீபத்தில் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

மகேஷ் பாபுவின் மகன் கௌதமிற்கு தற்போது 17 வயதாகிறது. இவர், தனது பள்ளிப்படிப்பை முடித்து பட்டம் பெற்றிருக்கிறார். 

மகேஷ் பாபுவின் மகனை பார்த்த ரசிகர்கள், இவர் அச்சு அசலாக தந்தையை போல இருப்பதாக கூறி இதனை வைரலாக்கி வருகின்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link