விஜய் சேதுபதி தன் குடும்பத்திடம் இப்படி எல்லாம் நடந்து கொள்வாரா...அட இந்த விஷயம் தெரியாம போச்சே!
விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா படம் தென்னிந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற படமாக அமைந்தது.
விஜய் சேதுபதி ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படையாக தன் குழந்தைகளிடம் நடந்து கொள்ளும் முறையைப் பற்றி ஜாலியாக பேசியுள்ளார்.
அப்போது, விஜய் சேதுபதி தன் மகன் மற்றும் மகளை எவ்வாறு அழைப்பார் என்று கூறியிருந்தார்.
விஜய் சேதுபதி தன் மகனை அப்பா என்றும், மகளை அம்மா என்றும் அழைப்பாராம். ஆனால் இரண்டு பேரும் விஜய் சேதுபதியை வீட்டில் அதிகாரம் செய்வார்கள் என்று ஜாலியாக கூறினார்.
அதுமட்டுமில்லாமல், விஜய் சேதுபதி தன் படப்பிடிப்பில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் தன் மகள் மற்றும் மகனிடம் தினமும் பகிர்ந்து கொள்வாராம்.
விஜய் சேதுபதி தன் குழந்தைகளிடம் அப்பா போன்று நடந்து கொள்ள மாட்டாராம் மாறாகக் குழந்தையாக நடந்து கொள்வாராம்.
விஜய் சேதுபதி நடிகர், வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகர் என பல்வேறு கதாபாத்திரத்தில், பல தோற்றங்களில் நடித்து மக்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.
விஜய் சேதுபதி திரை உலகில் மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்த நடிகர் என்று சொல்லலாம். ஷாருக்கான் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்து திரைத்துறையில் வெற்றிக் கொடியை நாட்டினார்.