இது விஜய்யா? அவரது மகனா? வித்தியாசமே தெரியல! ஜேசன் சஞ்சயின் ரீசண்ட் போட்டோஸ்!

Wed, 31 Jul 2024-9:31 am,

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் பள்ளி படிப்பை முடித்த இவர், சில ஆண்டுகளாக கனடாவில் உள்ள திரைப்பட கல்லூரியில் படித்தார்.

ஜேசன் சஞ்சய், சிறு வயதில் தனது தந்தையுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். விஜய் நடித்துள்ள போக்கிரி படத்தின் “வசந்த முல்லை” பாடலிலும், வேட்டைக்காரன் படத்தில் “நான் அடிச்சா தாங்க மாட்ட” பாடலிலும் ஆடியிருக்கிறார்.

நடிகர் விஜய்யும், சில வருடங்களுக்கு முன்பு கொடுத்திருந்த பல்வேறு நேர்காணல்களில் தனது மகன் குறித்தும் மகள் குறித்தும் பெருமையுடன் பேசியிருக்கிறார். ஆனால், சமீப ஆண்டு காலமாக இவர்கள் குடும்பத்தில் விரிசில் விழுந்ததாக கூறப்படுகிறது. 

ஜேசன் சஞ்சய், திரைப்பட கல்லூரியில் பயின்ற பிறகு தமிழகம் திரும்பினார். பின்னர், அவர் ஒரு படத்தை இயக்குவதாக கூறப்பட்டது. இந்த தகவலை, சில நாட்களில் லைகா நிறுவனம் உறுதிப்படுத்தியது. 

தற்போது, லைகா நிறுவனம் இயக்கும் ஒரு படத்தை இயக்குகிறார் சஞ்சய். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியதாக கூறப்படுகிறது. 

ஜேசனின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து லைகா நிறுவனம் ஒரு பதிவை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இவரது சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலானது. 

சஞ்சய், இந்த புகைப்படங்களில் பார்ப்பதற்கு அவரது தந்தை போலவே இருக்கிறார். 

விஜய் போலவே இருக்கும் ஜேசன் சஞ்சயை பார்த்த ரசிகர்கள், “இது விஜய்யா, சஞ்சயான்னே தெரியலையே” என கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

 

(Image Credits: Arun Prasad Photography)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link