விஜய்யுடன் கொஞ்சி விளையாடும் ஜேசன் சஞ்சய்! சிறு வயது போட்டோக்கள்..
ஜேசன் சஞ்சய், சென்னையில் பள்ளி படிப்பை முடித்த பிறகு, வெளிநாட்டில் உள்ள ஒரு பிரபல திரைப்படக்கல்லூரியில் பட்டப்படிப்பை படித்திருக்கிறார்.
கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது, குறும்படங்களை இயக்கி வந்த இவர், தற்போது தனது முதல் பெரிய படத்தை இயக்க தயாராகி விட்டார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தை ஜேசன் இயக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் முதல் துவங்கும் எனக்கூறப்படுகிறது.
ஜேசனின் முதல் படத்தில், சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். சந்தீப், தன்னிடம் ஜேசன் கதை சொன்ன போது 2 அரை மணி நேரம் பிரேக் விடாமல் கதை சொன்னதாக கூறியிருக்கிறார்.
ஜேசன் சஞ்சயை, இதற்கு முன்பு விஜய்யின் இரண்டு படங்களில் பார்த்திருப்போம். ஒன்று, போக்கிரி படத்தில் வரும் ‘வசந்த முல்லை’ பாடல், இன்னொன்று வேட்டைக்காரன் படத்தில் வரும் ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ பாடல்.
விஜய், தன் மகனுடன் இருக்கும் புகைப்படங்களும், சில வருடங்களுக்கு முன்பு அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியாகி வந்தது. ஆனால், இப்போது அவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பது போல எந்த புகைப்படங்களும் இல்லை.
விஜய்யுடன், சிறு வயதில் ஜேசன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.