Vijay: பல வருடங்கள் கழித்து கேரளாவிற்கு சென்ற விஜய்! ஆரவார அலப்பறையுடன் வரவேற்ற ரசிகர்கள்..

Mon, 18 Mar 2024-8:34 pm,

நடிகர் விஜய், தற்போது தனது 68வது படமான GOAT (Greatest Of All Time) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். 

பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் இப்படம், கண்டிப்பாக சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. 

GOAT படத்தில் நடிகர் விஜய், அப்பா, மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்.

விஜய், தனது படத்தில் ஷூட்டிங்கிற்காக தற்போது கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்திற்கு சென்றிருக்கிறார். இவர், கடைசியாக பல வருடங்களுக்கு முன்னர் கேரளாவிற்கு சென்றாராம். 

விஜய்யை பார்க்க, பல ஆயிரம் ரசிகர்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கூடினர். அவர்களை பார்த்து புன்னகைத்தபடியே விஜய் தனது காரில் ஏறி சென்றார். 

பொதுவாகவே, தமிழ் நடிகர்களுக்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம். குறிப்பாக, ரஜினி, விஜய், சூர்யா போன்ற நடிகர்களின் படங்கள் கேரள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறும். 

விஜய்யின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய்யின் புதிய தோற்றத்திற்கு ரசிகர்கள் பலர் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link