மஞ்சும்மல் பாய்ஸ் நடிகரை கரம் பிடித்தார் நடிகை அபர்ணா தாஸ்
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் அபர்ணா தாஸ். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.
இவர், மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்பொல் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார்.
2 வாரங்களுக்கு முன்பு அபர்ணா தாஸிற்கும் தீபக்கிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்ற நிலையில், இவர்களுக்கு திருமணம் விரைவில் நடக்க இருக்கிறது என்று செய்திகள் வெளியானது.
சமீபத்தில் அபர்ணா தாஸிற்கு ஹல்தி செலிப்ரேஷன் நடந்து முடிந்தது. இந்த நலங்கு நிகழ்ச்சியை மிக மகிழ்ச்சியாக கொண்டாடியிருக்கிறார் அபர்ணா.
இந்நிலையில் தமிழில் டாடா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை அபர்ணா தாஸ் இன்று மஞ்சும்மல் பாய்ஸ் நடிகரை கரம் பிடித்தார்.
இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியான நிலையில், பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.