`காதல் கண் கட்டுதே` - அதுல்யாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

Sun, 30 Jan 2022-6:25 pm,

2017ம் ஆண்டு வெளியான 'காதல் கண் கட்டுதே' படத்தின் தமிழ் திரைத்துறைக்குள் கதாநாயகியாக நுழைந்தவர் அதுல்யா ரவி.  தனது ஹோம்லியான லுக்கில் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

 

இதற்கு முன்னர் இவர் குறும்படங்களில் நடித்திருக்கிறார்.  இதனையடுத்து இவர் தமிழில் நாகேஷ் திரையரங்கம், ஏமாலி, நாடோடிகள் 2, சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, வட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

 

சமீபத்தில் சாந்தனுக்கு ஜோடியாக முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்.  இவரின் எதார்த்தமான நடிப்பு பலரையும் ஈர்த்தது.

 

இன்ஸ்டாகிராமில் இவர் சமீபத்தில் டீ-ஷர்ட் , ஜீன்ஸ் அணிந்துகொண்டு பதிவிட்ட புகைப்படம் பார்ப்பவர்களை பரவசமடைய செய்துள்ளது.  'உங்கள் கனவுகளை கனவுகளாகவே இருக்கவிடாதீர்கள்' என்ற கேப்ஷனுடன் இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் இதய எமோஜிகளை வாரி வழங்கி வருகின்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link