ரசிகர்களை மீண்டும் கவர வந்த மீரா ஜாஸ்மின்!

Sun, 06 Feb 2022-6:49 pm,

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் பெருமளவு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள நடிகை மீரா ஜாஸ்மின் மீண்டும் ஃபார்முக்கு வந்து தற்போதுள்ள இளம் நடிகைகளுக்கு தனது புகைப்படங்களின் மூலமாக டஃப் கொடுத்து வருகிறார்.

 

தமிழ் ரசிகர்ககளை விட இவர்களுக்கு மலையாளத்தில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.  மலையாள திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவருவராக இவர் காணப்பட்டார்.

 

கடந்த 2014ம் ஆண்டு தமிழில் வெளியான 'இங்க என்ன சொல்லுது' படத்தில் இறுதியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார்.  தற்போது மலையாளத்தில் 'மகள்' என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீப காலமாக இன்ஸ்டா பயன்படுத்த தொடங்கிய இவர் தற்போதுள்ள நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும்படி அசத்தலான பல போட்டாக்களை பதிவிட்டு வருகிறார்.  தற்போது இவர் கூடுதல் அழகுடன் வெள்ளை நிற ஷர்ட்டில் கொடுத்திருக்கும் போஸ்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link