Oviya Video: வீடியோவில் இருந்து நான் இல்லை! நடிகை ஓவியா புகார்!
நடிகை ஓவியா தொடர்பான அந்தரங்க வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் இருப்பது ஓவியா தான் என்று இணைய வாசிகள் கூறி வந்தனர்.
வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று ஓவியா மறுப்பு தெரிவிக்கவில்லை. மாறாக இன்ஸ்டாகிராமில் சிலருக்கு அந்த வீடியோ குறித்து கமெண்ட் செய்து இருந்தார்.
வீடியோ குறித்து இன்ஸ்டாவில் சிலர் கமெண்ட் செய்து இருந்தனர். அதற்கு ஓவியா "நெக்ஸ்ட் டைம் ப்ரோ", "என்ஜாய்" என்று பதில் அளித்து இருந்தார்.
இந்நிலையில், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மார்பிங் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளதாக சென்னை காவல் நிலையத்தில் ஓவியா புகார் அளித்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
திரைப்படங்களில் நடித்து வந்த ஓவியா பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பிறகு ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமடைந்தார். ஓவியா ஆர்மி என்ற தனி பட்டாளமே உருவாகியது.
வைரலான வீடியோவில் ஓவியாவை போன்று தோளில் பச்சை குத்திய பெண் ஒருவர் இருந்தார். அதன் காரணமாக இது ஓவியாவாக தான் இருக்கும் என்று பலரும் நம்பினர்.