அழகு பதுமையாய் அசரவைக்கும் ரம்யா பாண்டியன்!

Sun, 27 Feb 2022-8:06 pm,

'ஜோக்கர்' படத்தில் தனது எளிமையான நடிப்பின் மூலம் திரைத்துறைக்குள் என்ட்ரி ஆனவர் நடிகை ரம்யா பாண்டியன்.  இவர் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தான்.  அதில் புகழுக்கும் இவருக்கும் நடக்கும் சில ரசிக்கும்படியான காட்சிகள் அனைவராலும் விரும்பப்பட்டது.

 

இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பிக் பாஸ்-4ல் பங்குபெற்று அதிக வரவேற்பை பெற்றார், மேலும் அதே சேனலில் ஒளிபரப்பான காமெடி ஷோவில் நடுவராக பங்கேற்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'ராமே ஆண்டாளும் ராவண ஆண்டாளும்' படத்தில் இவரது இயல்பான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

 

வைரலாக புகைப்படங்களை வெளியிடுவதற்கென்றே பெயர் போன இவரின் சமீபத்திய புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link