உசுரு நரம்புல நீ ஏன் ஊசி ஏத்துற.. ரித்திகா சிங் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
மாதவன் நடிப்பில் வெளியான 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் நுழைந்தவர் ரித்திகா சிங். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியானது.
இப்படத்தில் இவரது துணிச்சலான கதாபாத்திரத்திற்காக மூன்று முறை ஃபிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். முதல் படத்தின் வாயிலாக ரசிகர்களை ஈர்த்த இவருக்கு அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்புகள் கிடைத்தது.
இவர் முதன்முதலாக 2002-ம் ஆண்டு வெளியான 'டார்ஸான் கி பேட்டி' என்ற ஹிந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தற்போது தனது திறமையால் கதாநாயகியாக வளர்ந்துள்ளார்.
இவர் இன்ஸ்டாவில் பதிவேற்றியுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களில் நீல நிற சூப்பர் மேன் டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்துகொண்டு கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்களின் இதயங்களை வருடும் விதமாக அமைந்துள்ளது, இதனை பார்த்த பலரும் பலவிதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.