Ritu Varma images: இணையத்தை கலக்கும் ரிது வர்மாவின் லேட்டஸ்ட் படங்கள்!

Mon, 18 Sep 2023-2:26 pm,

ரிது வர்மா தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.  அனுகோகுண்டா என்ற குறும்படம் மற்றும் பெல்லி சூபுலு திரைப்படத்தின் நடிப்பால் இவர் மிகவும் பிரபலமானவர். 

 

பெல்லி சூபுலுவில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான நந்தி விருதையும், சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருதையும் பெற்றார் . 

 

ரிது வர்மா ஹைதராபாத்தில் பிறந்தவர், இவரது பெற்றோர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். ஹைதராபாத்தின் வில்லா மேரி கல்லூரியில் இடைநிலைப் படித்து, மல்லா ரெட்டி பொறியியல் கல்லூரியில் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார் . 

 

பட்டப்படிப்பை முடித்ததும், மிஸ் ஹைதராபாத் அழகு போட்டியில் பங்கேற்று முதல் ரன்னர்-அப் ஆக அறிவிக்கப்பட்டார். 

 

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.  தற்போது வெளியான மார்க் ஆண்டனி படத்திலும் நடித்துள்ளார் ரிது வர்மா.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link