உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள சாக்ஷி அகர்வால் செய்யும் விஷயம்! அட..இவ்வளவுதானா?
சாக்ஷி அகர்வால், தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். இவர், ஒரு பக்கம் படங்களில் நடித்து வந்தாலும், இன்னொரு பக்கம் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கொடுக்கும் டிப்ஸை இங்கு பார்ப்போம்.
சாக்ஷி அகர்வால், தினமும் ஜிம் செல்வாராம். ஒரு நாள் தவறினாலும் மறுநாள் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்ய தவறாதவர் இவர்.
சாக்ஷி HIIT உடற்பயிற்சி விரும்பியாம். இந்த உடற்பயிர்சியினால் கோர் ஸ்ட்ரெந்த் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
சாக்ஷி, தினமும் யோகா பயிற்சியையும் செய்கிறார். இது, உடலை Flexible ஆக வைத்திருக்கவும், உடலின் தோரணையும் மாற்ற செய்யலாம் என கூறுகிறார்.
ஹெல்தியான டயட் இருப்பதிலும் கவனம் செலுத்துகிறார் சாக்ஷி. புரத சத்துகள், வைட்டமின் சத்துகள் நிறைந்திருக்கும் உணவுகளை தனது தினசரி டயட்டில் சேர்த்துக்கொள்கிறார்.
இஞ்சி டீயில், அழற்சி எதிர்ப்பு தன்மை இருக்கிறது. இது, மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் உதவி புரியும். இது, சிறப்பான மார்னிங் டிர்ங்காக இருக்கும் என கூறப்படுகிறது.
உடலை பத்திரமாக பார்த்துக்கொள்ள நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதும் சாக்ஷியின் கருத்தாக இருக்கிறது.