புடவை பாதி.. ஜீன்ஸ் மீதி.... நடிகை விஜயலட்சுமியின் புதுவித போட்டோ ஷூட்..!
அஞ்சாதே, சென்னை 28, வெண்ணிலா வீடு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் பிக் பாஸ் சீசன் 2 கலந்து கொண்டார்.
திரைப் படங்களிலும் சமூக வலைதளத்திலும் இதுவரை கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடாமல் இருந்த விஜயலட்சுமி இப்பொழுது சுண்டி இழுக்கும் இடையை கட்டியவாறு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
பல படங்களில் நடிகராக வலம் வந்த வெங்கட் பிரபுவை கலகலப்பான இயக்குனராக மாற்றிய சென்னை 28 திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு கதா நாயகியாக அறிமுகமான நடிகை விஜயலட்சுமி இன்று வரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
காதல் கோட்டை உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அகத்தியனின் மகளான இவர் படங்களில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் பிக் பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டு அனைவரின் மனங்களையும் கவர்ந்தார்.
சென்னை-28 திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், பிரியாணி, வெண்ணிலா வீடு என தொடர்ந்து நடித்து வந்த இவர் இப்பொழுது சிம்புதேவன் இயக்கி வரும் கசடதபற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.