மாவீரன் முடித்த கையோடு சிட்டாக வெளிநாடு பறக்கும் அதிதி சங்கர்

Sun, 02 Jul 2023-9:06 pm,

ஷங்கரின் மகள் அதிதி சங்கர், ’விருமன்’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் கார்த்தி நடித்தார்.

 

சிறப்பாக நடித்த அதிதி சங்கர், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் ’மாவீரன்’ திரைப்படத்தில் கமிட்டானார். 

 

இந்த படம் இம்மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மாவீரன் சூட்டிங் முடித்த அதிதி சுடச்சுட அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார்.

 

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் லீட் ரோலில் அதிதி சங்கர் நடிக்கிறார். நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளி நாயகனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த படத்தின் முதல் கட்டப்பட படிப்பு சென்னையில் நடந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெறுகிறதாம்.

 

இதற்காக விஷ்ணுவர்தன், அதிதி ஷங்கர், ஆகாஷ் முரளி உட்பட படக்குழுவினர் விரைவில் வெளிநாடு செல்ல உள்ளனர்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link