18 ஆண்டுக்கு பின் புதன்-ராகுவின் அபூர்வ சேர்க்கை, 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், லாபம், வெற்றி
ரிஷப ராசியினருக்கு சாதகமான பலன் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள். வங்கி இருப்பு அதிகரித்து நிதி நிலை மேம்படும். மன அழுத்தம் குறைந்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும்.
கடக ராசிக்காரர்களுக்கு வெற்றி மழை பொழியும். பண பலன் கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு பண பலன் கிடைக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும். திருமணம் நடக்கலாம். வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். பதவி உயர்வு பெறுவீர்கள்.
ராகு-புதன் சேர்க்கையால் விருச்சிக ராசியினருக்கு சுகமாக இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை பெறலாம். வியாபாரத்தில் லாபம் பெருகும். பொருளாதார நிலை மேம்படும். சிறப்பாக இருக்கும்.
மீனத்தில் ராகு-புதன் சேர்க்கை நடக்கப் போவதால் மீன ராசிக்கு சுப பலன் உண்டாகும். விருப்பங்கள் அனைத்தும் ஒன்றின்பின் ஒன்றாக நிறைவேறும். தொழிலில் பெரிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் பெருகும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.