Actor Vishal: விஜய்யை தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்!

Tue, 06 Feb 2024-10:30 am,

கடந்த பிப்ரவரி 2ம் தேதி விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் கட்சியை தொடங்கி விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார்.  

 

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக, தளபதி 69 படத்தில் மட்டும் நடிக்க உள்ளார். அதனை தொடர்ந்து சினிமாவிலிருந்து விலக உள்ளார்.

 

இந்நிலையில், நடிகர் விஷாலும் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.  விஷால் பல ஆண்டுகளாக தமிழக அரசியலில் ஆர்வம் காட்சி வருகிறார்.  சென்னை ஆர்.கே.நகர் சட்ட மன்ற இடைத்தேர்தலில் போட்டியிட இருந்த விஷாலின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

 

சமீபத்தில் விஷால் தனது ரசிகர் மன்றத்தை ‘விஷால் மக்கள் நல இயக்கம்' என்று பெயர் மாற்றம் செய்துள்ள உள்ளார்.  மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொறுப்பாளர்களை நியமித்து உள்ளார். 

 

தற்போது 2024 நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளார் விஷால். கூடிய விரைவில் கட்சி பெயரை அறிவிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link