நீருக்குள் நீர்வீழ்ச்சி! இதுவரை எடுக்கவே முடியாத புகைப்படத்தை உருவாக்கி அசத்திய செயற்கை நுண்ணறிவு நுட்பம்...
உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி நீருக்கடியில் உள்ளது, இது ஐஸ்லாந்து மற்றும் கிரீன்லாந்து இடையே டென்மார்க் ஜலசந்தியில் அமைந்துள்ளது.
மிகவும் அரிதான இந்த நீர்வீழ்ச்சியை இதுவரை விஞ்ஞானிகளால் புகைப்படம் எடுக்க முடியவில்லை. சாத்தியமிலலதவற்றையும் சாத்தியமாக்கும் செயற்கை நுண்ணறிவு உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியின் புகைப்படத்தை எடுத்துத் தந்துள்ளது
மூன்று கிலோமீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட இந்த நீர்வீழ்ச்சி ஏஞ்சல் நீர்வீழ்ச்சியை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. ஒவ்வொரு நொடியும், மூன்று மில்லியன் கன மீட்டருக்கும் அதிகமான குளிர்ந்த, அடர்த்தியான நீர் ஜலசந்தி வழியாக பாய்கிறது. இந்த படம் மைக்ரோசாப்டின் AI ஆல் உருவாக்கப்பட்டது.
டென்மார்க் ஜலசந்தியில் அமைந்துள்ளது. இது டென்மார்க் ஸ்ட்ரெய்ட் கடாராக்ட் (Denmark Strait Cataract) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சி அட்லாண்டிக்கின் தெர்மோஹலைன் சுழற்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சுழற்சி நமது முழு கிரகத்தின் காலநிலையையும் பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
நீருக்கடியில் நீர்வீழ்ச்சிகள் இருக்கும் என்பது முரண்பாடாகத் தோன்றலாம். எல்லாப் பக்கமும் தண்ணீரால் சூழப்பட்டிருந்தால், எப்படி உயரத்தில் இருந்து தண்ணீர் விழும்? என்ற கேள்வி எழலாம். ஆழமான பகுதிகளில் இறங்கும் அடர்த்தியான, வண்டல் நிறைந்த நீரின் இயக்கத்தால் உருவாகும் ஒரு 'கேஸ்கேட் விளைவு' இந்த நீர்வீழ்ச்சியை உருவாக்குகிறது.
நீருக்கடியில் உள்ள நீர்வீழ்ச்சிகளை நம் கண்ணால் பார்க்க முடியாது, ஏனென்றால் தண்ணீர் ஒரே மாதிரியாகத் தெரியும். இந்தப் படத்தையும் மைக்ரோசாப்டின் AI உருவாக்கியுள்ளது.
மொரிஷியஸில் மிகவும் பிரபலமான 'நீருக்கடியில் உள்ள நீர்வீழ்ச்சி' ஒன்று உள்ளது. கடல் நீரோட்டங்கள் தீவின் விளிம்பிலிருந்து கரையோர மணலைத் தள்ளும்போது, அது கீழே உள்ள பள்ளத்தில் விழுகிறது. நீருக்கடியில் நீர்வீழ்ச்சியாகத் தோன்றும் இது உண்மையில் ஆழமான நீரில் மணல் மூழ்கி கடலின் அடிப்பகுதிக்கு இறங்குகிறது. இதை ஆப்டிகல் மாயை என்று அழைக்கலாம், இருப்பினும் அது வசீகரமாக இருக்கிறது!
வெனிசுலாவின் கனைமா தேசிய பூங்காவில் அமைந்துள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி 979 மீட்டர் (3,212 அடி) உயரமும் 807 மீட்டர் (2,648 அடி) ஆழமும் கொண்ட உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும்.