9 ரூபாய்க்கு அன்லிமிடெட் டேட்டா... ஆஹா - ஏர்டெல் யூசர்கள் இனி மஜா பண்ணலாம்!

Mon, 24 Jun 2024-7:21 pm,

முன்பெல்லாம் காலிங் வசதிக்கே நாம் அதிகம் ரீசார்ஜ் செய்வோம். ஆனால் தற்போது டேட்டா பயன்பாடுதான் முக்கியமாக உள்ளது. 

 

அந்த வகையில், ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற முன்னணி நிறுவனங்கள் தொலைத்தொடர்பு பல்வேறு டேட்டா திட்டங்களை கொண்டுள்ளன.

 

குறிப்பாக, ஏர்டெல் நிறுவனம் பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக இப்போது புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதன் விலை 9 ரூபாய்தான்.

 

இந்த 9 ரூபாய் பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் சிறப்பம்சமே வரம்பற்ற டேட்டாதான். உங்களிடம் டேட்டாவை இல்லையென்றால் இதை பயன்படுத்தலாம். இதற்கு உங்களுக்கு அடிப்படை பிளான் தேவை.

இருப்பினும், இந்த 9 ரூபாய் பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி 1 மணிநேரம் அதாவது, முழுமையாக 60 நிமிடங்கள்தான். 

 

வரம்பற்ற டேட்டாவை அளிக்கும் என்றாலும் ஒருமணி நேரத்தில் 10ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பின்னர் இணைய வேகம் 64kbps ஆக குறையும். அந்த வேகத்திலும் உங்களால் இணையத்தில் தேடவும், மெசேஜ் அனுப்பவும் முடியும். பெரிய வீடியோக்களை பார்க்கவோ அல்லது டவுண்லோட் செய்யவோ முடியாது. 

 

இந்த திட்டத்தை அவசர உதவிக்கே அதிகம் பயன்படுத்தலாம். அதாவது இணையம் இல்லாத, வைஃபை இல்லாத சூழலில் பயன்படுத்தலாம். 

 

இதனை நீங்கள் Airtel Thanks App அல்லது Airtel தளத்தின் மூலம் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். நீங்கள் ரீசா்ர்ஜ் செய்து சரியாக ஒருமணி நேரத்தில் தீர்ந்துவிடும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link