Airtel 2GB Offer: வரம்பற்ற அழைப்புகள் SMS உடன் ஏர்டெல் சிறந்த பிளான்கள்

Wed, 29 Jun 2022-5:50 pm,

ஏர்டெல்லில் நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்று ரூ. 839 திட்டம். ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 செய்திகள் மற்றும் 84 நாட்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மூன்று மாதங்களுக்கு Disney+ Hotstar மொபைல் திட்டத்தையும், Airtel Xstream மொபைல் பேக்கையும், FasTagல் கேஷ்பேக்கையும் இந்தத் திட்டம் தருகிறது.

ஏர்டெல் பயனர்களுக்கான 549 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டம், ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவுடன் வரம்பற்ற டேட்டாவை வழங்கும் திட்டமாகும். இது வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 குருஞ்செய்திகள் அனுப்பலாம் என்று சலுகை கொடுக்கிறது. அதோடு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மொபைல் பேக்கை வழங்குகிறது. இந்த ரீசார்ஜ் பேக் 56 நாட்கள் செல்லுபடியாகும்.

மாதாந்திர அடிப்படையில் ரீசார்ஜ் பிளானை எடுத்துக் கொள்ள விரும்பினால், ரூ. 319 திட்டம். ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் உங்களுக்கு ஏற்றது. வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 செய்திகள் கொண்ட இந்த பிளான், 28 நாட்கள் செல்லுபடியாகும். தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும்.

வருடாந்திர திட்டம் தேவை என்பவர்களுக்கு உகந்த திட்டம் ரூ. 2999 பிளான். 365 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள், செய்திகள் மற்றும் 2ஜிபி தினசரி டேட்டா போன்ற அனைத்து வசதிகளையும் வழங்குகிரது. மாதந்தோறும் கணக்கிட்டால், மாதத்திற்கு சுமார் ரூ. 250 ஆகும். இது மாதாந்திர அல்லது காலாண்டு திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதை விட மிகவும் மலிவு என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்க விரும்புபவர்களுக்கான திட்டம் ரூ 359 ரீசார்ஜ் பிளான். Amazon Prime Video Mobile Edition மற்றும் Airtel Xtreme Mobile சந்தாவை இலவசமாக வழங்கும் திட்டம் இது. 28 நாட்கள் செல்லுபடியாகும்  

தொலைதொடர்பு சேவைகளை வழங்கும் ஏர்டெல் நிறுவனம் முன்கூட்டியே பணம் செலுத்தி சேவைகளை அனுபவிக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தில் 2GB டேட்டவுடன் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் SMSகளைத் தரும் சில திட்டங்களை வைத்திருக்கிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link