அஜித் முதல் தனுஷ் வரை... படப்பிடிப்பு தளத்தில் காயமடைந்த திரை பிரபலங்கள்!
'வலிமை' படத்தின் படப்பிடிப்பின் போது பைக் சண்டை காட்சியில் நடிகர் அஜித்குமார் பைக்கிலிருந்து கீழே விழுந்து காயமடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
'பிச்சைக்காரன்-2' படப்பிடிப்பு தளத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
நடிகர் விஷால் ஒரு தடவையல்ல, பல தடவைகள் படப்பிடிப்பு தளங்களில் சண்டை காட்சிகளின் போது காயமடைந்து சிகிச்சை எடுத்திருக்கிறார்.
நடிகர் அருண் விஜய், ஏஎல் விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார், இப்படத்தின் சண்டை காட்சி லண்டனில் நடைபெற்றபோது இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
'மாரி-2' படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சண்டை காட்சியில் நடிகர் தனுஷுக்கு கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.