சென்னை மக்களே... 55 மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து... பயப்பட வேண்டாம் - இதை படிங்க!
தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஜூலை 23) முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் 55 மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எந்தெந்த மார்க்கத்தில் எந்தெந்த நேரத்து மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என்பதையும், ரத்து செய்யப்படும் ரயில்களுக்கு பதிலாக என்னென்ன நேரத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன என்பதையும் இதில் விரிவாக காணலாம்.
சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.30 மணி, 9:40, 9.48, 9.56, 10.04, 10.12, 10.24, 10.30, 10.36, 10.46, 10.56, 11.06, 11.14, 11.22, 11.30, 11.40, 11.50, 12.00, 12.10, 12.20, 12.30, 12.40, 12.50 ஆகிய நேரங்களில் கிளம்பும் 23 மின்சார ரயில்கள் காலையில் ரத்து செய்யப்படுகிறது.
ரத்து செய்யப்பட்ட 23 மின்சார ரயில்களுக்கு பதிலாக சிறப்பு ரயில்களாக காலை 9.30, 9.50, 10.10, 10.30, 10.50, 11.10, 11.30, 11.50, 12.10, 12.30, 12.50 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரை நாளை முதல் ஆகஸ்ட்14ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம் வரை இரவு 7.15, 7.19, 8.15, 8.45, 8.55, 9.40, 10.40, 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
இதற்கு பதிலாக இரவு 10.40,11.05,11.30, 11.59 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை, செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை, காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் 15 மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
இந்த 15 ரயில்களுக்கு பதிலாக காலை 10.20, 10.40, 11.00, 11.20, 11.40, 12.00, 12.20, 12.40, 1.00, 1.20, 1.40 ஆகிய நேரங்களில் (20 நிமிட இடைவெளியில்) பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.