கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது - ஆர் எஸ் பாரதி!

Tue, 27 Aug 2024-11:03 am,

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழா மற்றும் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்வு நேற்று நாகையில் நடைபெற்றது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

 

திமுகவில் இணைவதற்காக, நாகை மாவட்டம் நாகூர் சம்பாதோட்டம், சாமந்தான்பேட்டை, நம்பியார் நகர், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, செருதூர், காமேஸ்வரம், விழுந்தமாவடி, வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, புஷ்பவனம் என 14 கிராமங்களைச் சேர்ந்த 1600 மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் ஊர்வலமாக வந்தனர். அவர்களை திமுகவினர் தாரை தப்பட்டை முழங்க வரவேற்றனர்.

 

பின்னர் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி வந்த மீனவர்கள் இன்று அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாவட்ட செயலாளர் கௌதமன் ஆகியோர் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். 

 

திமுகவில் இணைந்த மீனவர்களை வரவேற்ற அமைச்சர் ரகுபதி மற்றும் ஆர் எஸ் பாரதி ஆகியோர் அவர்களுக்கு கட்சியின் சார்பில் பொன்னாடை மற்றும் சால்வை அணிவித்தனர்.

 

பின்னர் நிகழ்வில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழகத்தில் யார் புதிதாக கட்சி ஆரம்பித்தாலும் பரவாயில்லை! அவர்கள் ஓரிரு அமாவாசைகள் மட்டுமே தாங்குவார்கள். அதற்கு மேல் அவர்கள் தாங்க மாட்டார்கள். கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. எம்ஜிஆர் திமுகவை விட்டு சென்றது என்பது பங்காளி சண்டையில் பாகப்பிரிவினை எடுத்துச் சென்றது தான். 

 

அதைப்போல் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல் தற்போது கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லாம் நாளைக்கே கோட்டைக்கு சென்று கொடியை நட்டுவிடலாம் என மனக்கோட்டை கட்டுகிறார்கள் என்றார். பதவி கிடைக்கும் என்ற எண்ணத்தில் புதிய கட்சிக்கு தாவி சென்றவர்கள் அது காலி பானை என தெரிந்ததும் சென்ற வேகத்தில் திரும்பி வருகின்றனர் என்று விமர்சனம் செய்தார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link