சர்ச்சையில் சிக்கிய சாய் பல்லவி! அமரன் படத்தால் வந்த புதிய சிக்கல்!
நடிகை சாய் பல்லவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். தனது முக்கியதுவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
சாய் பல்லவி நடித்துள்ள அமரன் படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து நாக சைதன்யாவுடன் தண்டேல் படத்திலும், ரன்பீர் கபூருக்கு ஜோடியாகவும் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் சாய் பல்லவி பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. 2022ம் ஆண்டு இந்திய ராணுவத்தை பற்றி அவர் பேசிய ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
"பாகிஸ்தானில் உள்ள மக்கள் நம் இராணுவத்தை ஒரு பயங்கரவாதக் குழு என்று நினைக்கிறார்கள். நாம் அவர்களை பயங்கரவாதிகள் என்று நினைக்கிறோம். ஒவ்வொருவரின் பார்வை தான் மாறுகிறது. எனக்கு வன்முறை புரியவில்லை" என்று தெரிவித்து இருந்தார்.
சாய் பல்லவி எதார்த்தமாக சொல்லி இருந்தாலும் தற்போது சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக பலர் திரும்பி உள்ளனர். #BoycottSaiPallavi என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
"சாய் பல்லவி இந்திய ராணுவத்தை பாகிஸ்தான் பயங்கரவாதி என்று அழைத்தார்", "மக்களின் தேசபக்தி புண்படுத்தப்பட்டது" என்றும் சிலர் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் சாய் பல்லவி தேசிய போர் நினைவகத்திற்குச் சென்று, மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் விக்ரம் சிங் எஸ்சி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார்.