இதய ஆரோக்கியம் முதல் செரிமானம் வரை... பிளாக்டீயில் புதைந்திருக்கும் நன்மைகள்!
Black Tea Benefits: கொஞ்சம் ஸ்ட்ராங்கான சுவை கொண்ட பிளாக் டீ, காலையில் புத்துணர்ச்சி அளிக்கக் கூடியது. இதனால் பல உடல்நல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்கின்றனர், உணவியல் நிபுணர்கள்.
பிளாக் டீயில் பல ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால், இதய தமனிகளை சுற்றியுள்ள ரத்த கட்டிகள் கரைந்து, மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறையும்.
பிளாக் டீயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள், நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
டானின் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொண்ட பிளாக் டீ செரிமானத்தை மேம்படுத்தி, வாயு வயிற்று உப்பிசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
பிளாக் டீயில் உள்ள ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமான மண்டலத்தை வலுவாக்குகிறது.
பருவ கால நோய்களிலிருந்து தப்பிக்க, பிளாக் டீ உதவும். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.