மூத்த குடிமக்களுக்கான அசத்தலான FD விகிதங்கள்: பம்பர் லாபம் காணலாம்

Sat, 01 Jun 2024-9:01 pm,

நிரந்தர வைப்பு, அதாவது FD முதலீடு செய்வதற்கான மிகவும் பிரபலமான வழிமுறைகளில் ஒன்றாகும். FD திட்டங்கள் மூலம், வாடிக்கையாளர்கள் உத்தரவாதமான பாதுகாப்பு மற்றும் நிலையான வருமானத்தைப் பெறுகிறார்கள். தற்போது, ​​பல்வேறு வங்கிகள் தங்கள் FD திட்டங்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன, மேலும் புதிய FD திட்டங்களையும் கொண்டு வருகின்றன.

இந்நிலையில், பேங்க் ஆஃப் இந்தியா (BOI) மூத்த குடிமக்களுக்காக 666 நாட்கள் சிறப்பு FD திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ், வாடிக்கையாளர்களுக்கு ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு 7.95 சதவீதம் வரை ஆண்டு வருமானம் கிடைக்கும்.

இந்தத் திட்டத்தைப் பற்றிய தகவல்களை அளித்த வங்கி, சூப்பர் மூத்த குடிமக்களுக்கான 666 நாட்கள் நிலையான வைப்புத் திட்டம், 666 நாட்களுக்கான ரூ. 2 கோடிக்கு குறைவான டெபாசிட்டுகளுக்கு, ஒரு ஆண்டுக்கு 7.95 சதவிகித கவர்ச்சிகரமான வருமானத்தை வழங்கும் என தெரிவித்துள்ளது. இந்த சூப்பர் சீனியர் சிட்டிசன் திட்டம் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கானது.

இந்தியன் வங்கியின் அனைத்து வாடிக்கையாளர்களும் மற்றும் பொதுமக்களும் இந்த சூப்பர் சீனியர் சிட்டிசன் திட்டத்தின் பலன்களைப் பெறலாம். இந்த 666 நாட்கள் FD திட்டமானது FD -இல் அதிக வருமானம் தரும் என்று கூறப்படுகிறது.

மூத்த குடிமக்களுக்கு இந்த FD -இல் 7.80 சதவீத வருடாந்திர வட்டியைப் பெறுவார்கள். பிற வயதுப் பிரிவைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு 7.30 சதவீத வருடாந்திர வட்டி வழங்கப்படும். 

இந்த சிறப்பு FD திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வைப்புத்தொகையில் கடனும் கிடைக்கும். இது தவிர மெச்யூரிட்டிக்கு முன்னர் பணத்தை எடுக்கும் (Premature withdrawal facility) வசதியும் இதில் உள்ளது.

வாடிக்கையாளர்கள் இந்த FD ஐத் திறக்க பேங்க் ஆஃப் இந்தியாவின் எந்தக் கிளைக்கு வேண்டுமானாலும் செல்லலாம். FD ஐ திறக்க வாடிக்கையாளர்கள் BOI Omni Neo செயலியையும் பயன்படுத்தலாம். வாடிக்கையாளர்கள் FD ஐத் திறக்க இணைய வங்கி வசதியைப் பயன்படுத்தலாம்.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு உங்களது தகவல்களுக்காக அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன் வங்கிக்கு சென்று திட்டத்தை பற்றிய முழுமையான தகவல்களை பெற பரிந்துரைக்கப்படுகிறீர்கள். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link