அஸ்வகந்தாவில் இருக்கு எக்கச்சக்க ஆரோக்கிய நன்மைகள்: விவரம் இதோ

Tue, 04 Oct 2022-8:01 pm,

விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க அஸ்வகந்தா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மாறிவரும் வாழ்க்கை முறையால், பெரும்பாலான ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைபாடு ஏற்பட்டு, குழந்தையின்மை பிரச்னை அதிகரித்து வருகிறது. ஆகையால் அத்தகைய ஆண்களின் பிரச்சனைகளை நீக்குவதில் அஸ்வகந்தா பயனுள்ளதாக இருக்கும்.

அஸ்வகந்தாவில் பல வித ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உடல் பலவீனத்தை நீக்க உதவுகிறது. இதன் நுகர்வு ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இருப்பினும், ஒரு மருத்துவர் அல்லது நிபுணரின் ஆலோசனையின்றி அதைப் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அஸ்வகந்தாவை உட்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அதாவது சர்க்கரை நோயாளிகளும் இதை கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதிக மன அழுத்தம் உள்ளவர்கள் அஸ்வகந்தாவை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உங்கள் மன அழுத்தத்தையும் குறைக்கும்.

கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது மிகவும் நன்மை பயக்கும். கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருந்தால், மாரடைப்பு ஏற்படும் அபாயமும் குறையும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.) 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link