சிறுநீரக கல் முதல் நீரிழிவு நோய் வரை: பிரிஞ்சி இலையின் அட்டகாசமான நன்மைகள்
பிரிஞ்சி இலை மிகவும் பிரபலமான ஒரு மசாலா ஆகும். இதை சாப்பிடும் போது உணவிற்கு சுவையோடு நறுமணமும் கிடைக்கின்றது. ஆனால், இந்த பிரிஞ்சி இலைகள் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை.
உணவின் சுவையை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள பிரிஞ்சி இலையில் ஏராளமான ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் இரும்புச்சத்து, தாமிரம், செலினியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நீரிழிவு உட்பட பல நோய்களை இந்த இலை குணப்படுத்தும் காரணம் இதுதான்.
பல ஆராய்ச்சிகளில், பிரிஞ்சி இலை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கியமானதாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனுடன் நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்துகிறது.
பிரிஞ்சி இலைகளை தொடர்ந்து உட்கொள்வது வயிறு தொடர்பான பல நோய்களை குணப்படுத்துகிறது. வயிற்று வலி, மலச்சிக்கல், பிடிப்புகள் மற்றும் அசிடிட்டி (Acidity) பிரச்சனைகளுக்கு இதனை உட்கொள்வது நல்லது. இது செரிமான செயல்முறையை சரியாக வைத்திருக்கும்.
சிறுநீரக கற்கள் (Kidney Stone) பிரச்சனையில் பிரிஞ்சி இலை ஒரு வரப்பிரசாதமாக உதவும். இதற்கு முதலில் பிரிஞ்சி இலைகளை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். அதன் பிறகு, தண்ணீரை ஆறவைத்து வடிகட்டி குடிக்கவும். இதன் மூலம் சிறுநீரகத்தில் இருக்கும் கற்கள் உருகி வெளியேறும்.
பிரிஞ்சி இலைகளை (Bay Leaf) உட்கொள்வது தூங்க முடியாதவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனையை அகற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும். பிரிஞ்சி இலை எண்ணெய் இதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதன் எண்ணெயை இரண்டு மூன்று துளிகள் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் தூக்கமின்மை பிரச்சனை நீங்கும்.
உணவின் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிக்க பிரிஞ்சி இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உணவில் சேர்ந்துவிடுகின்றன. அந்த உணவை நாம் உட்கொள்ளும் போது நமக்கு அதன் நன்மைகள் கிடைக்கின்றன. இதை உணவில் சேர்த்து சாப்பிடுவதும் பலன் தரும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.