கொத்தமல்லி: சிறுநீரக கல் முதல் நீரிழிவு வரை.. பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு

Sat, 14 Oct 2023-10:51 am,

சுவை சேர்க்கும் கொத்தமல்லி: சாம்பார், ரசம், தால், கறி, சூப், பச்சடி என பல உணவு வகைகளின் தோற்றம், மணம் மற்றும் சுவையை அதிகரிக்க நாம் கொத்தமல்லி இலைகளை பயன்படுத்துகிறோம்.

 

கொத்தமல்லியின் ஆரோக்கிய நன்மைகள்: கொத்தமல்லி பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தி அடிக்கடி நோய்வாய்ப்படுவதைத் தடுக்கிறது. 

கொத்தமல்லி இலையில் காணப்படும் செரிமான (Digestion) நொதிகள் வயிறு தொடர்பான நோய்களைக் குறைக்கின்றன. இது அஜீரணம், வாயு, அமிலத்தன்மை, எரியும் உணர்வு மற்றும் வயிற்றில் வீக்கம் போன்ற பிரச்சனைகளை நீக்கி, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

 

பச்சை கொத்தமல்லி இலைகளில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த இலைகளை உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் (Home Remedy For Cholesterol) வைக்கலாம். கெட்ட கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும் போது, ​​உடல் பருமன் (Home Remedy For Weight Loss) அதிகமாவதில்லை. இது தவிர, இதயம் தொடர்பான அபாயங்களும் குறையும்.

குர்செடின் மற்றும் டோகோபெரோல் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கொத்தமல்லி இலைகளில் காணப்படுகின்றன. இதன் உதவியுடன் புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம். இது தவிர, கொத்தமல்லி இலைகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை (Home Remedy For Immunity) வலுப்படுத்தும் நரம்பியல் விளைவுகளையும் கொண்டுள்ளது.

 

சிறுநீரகத்தை சுத்தப்படுத்த சில இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம். கொத்தமல்லி சிறுநீரக நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. கொத்தமல்லியில் ஆண்டிமைக்ரோபையல், ஆண்டிடிரஸன், ஆண்டிமூட்டஜெனிக், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த பண்புகள் சிறுநீரக செயல்பாட்டிற்கு பயன்படுகிறன. சிறுநீரக கற்கள் (Home Remedy For Kidney Stones) உட்பட அனைத்து சிறுநீரக பிரச்சனைகளையும் கொத்தமல்லி களைகிறது.

 

கொத்தமல்லி இன்சுலின் செயல்திறனை அதிகரிக்கிறது. இது உடலில் இரத்த சர்க்கரையை (Home Remedy For Diabetes) கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் இலைகளில் காணப்படும் சாற்றின் உதவியுடன், உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை சமநிலைப்படுத்துவது மிகவும் எளிதானது.

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link