அமேசானில் அசத்தல் ஆஃபர்... ரூ.6,259 தள்ளுபடியில் Oneplus 12...!!

Fri, 19 Jul 2024-3:43 pm,

OnePlus 12 போனில்  120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வரும் 2K டிஸ்ப்ளே உள்ளது. டிஸ்பிளேயில் அக்வா டச் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஈரமான கைகளாலும் போனை டச் செய்ய முடியும்.

ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Oxygen OS ஆபரேடிங் சிஸ்டத்தில் வேலை செய்யும் OnePlus 12 ஃபோனில், Qualcomm Snapdragon 8 Gen 3 செயலி பொருத்தப்பட்டுள்ளது.

OnePlus 12 ஸ்மார்ட்ஃபோனில் 12GB ரேம் மற்றும் 256GB சேமிப்பு வசதி உள்ளது.

OnePlus 12 போனில் புகைப்பட பிரியர்களுக்காக மூன்று பின்புற கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.  OIS ஆதரவுடன் 50MP சோனியின் LYT-808 முதன்மை கேமராவுடன் வருகிறது. 48MP அல்ட்ரா-வைட் சென்சார் உள்ளது. மேலும் இதில், 64MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் கொண்டுள்ளது. 

OnePlus 12 ஸ்மார்போனின் வண்ணத்தை பொருத்தவரை, சில்க்கி பிளாக், ஃப்ளோவி எமரால்டு மற்றும் கிளேசியல் ஒயிட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

OnePlus 12 ஃபோனில் 5400mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளது.  100W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டும் உள்ளது.

OnePlus 12 போனின் 12GB RAM 256GB சேமிப்பகம் கொண்ட மாடலை ரூ.59,999க்கு வாங்கலாம்

OnePlus 12 போனின் தள்ளுபடி சலுகையைப் பற்றி பேசுகையில், பிரைம் சேவிங்ஸ் டே விற்பனையின் போது இந்த போனை வாங்க ரூ.6259 தள்ளுபடி பெறலாம். மேலும், ரூ.2,909 இஎம்ஐ தொடங்கும் விருப்பமும் இதில் உள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link