2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மாட்டேன்! அடம் பிடிக்கும் அமேசான்! ஆர்டர் போட்டவங்க கேர்புல்

Tue, 19 Sep 2023-3:25 pm,

இன்று முதல் இரண்டாயிரம் ரூபாய் பணத்தாள்களை, கேஷ் ஆன் டெலிவரியில் (cash-on-delivery (COD)) பெற்றுக் கொள்வதை நிறுத்துவதாக ஆமேசான் அறிவித்தது.  

 

₹2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்கிய மே 19 அன்று நீக்கிய இந்திய ரிசர்வ் வங்கி (RBI), மக்களிடம் உள்ள பணத்தாள்களை மாற்ற அல்லது டெபாசிட் செய்ய செப்டம்பர் 30 வரை அவகாசம் அளித்தது.

அமேசான் நிறைவேற்றும் ஆர்டர்கள் இனி ₹2,000 நோட்டுகளை கட்டணமாக அனுமதிக்காது. ஆனால், மூன்றாம் தரப்பு கூரியர் சேவைகள் அதை ஏற்கலாம் என்று டைடன் ஈ-காமர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அல்லது டெபாசிட் செய்வதற்கான கட்-ஆஃப் தேதி செப்டம்பர் 30 ஆம் தேதியாக இருக்கும் நிலையில், கணிசமான 2000 ரூபாய் நோட்டுகள் ஏற்கனவே வங்கிகளுக்குத் திரும்பிவிட்டது.

ஜூன் 30ஆம் தேதிக்குள் இந்திய வங்கிகளுக்கு ₹2.72 டிரில்லியன் மதிப்புள்ள ₹2,000 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார். 

ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, இந்த உயர்மதிப்பு நோட்டுகளில் 76% வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன அல்லது மாற்றப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் இதற்கு முன்பு அனைத்து ₹500 மற்றும் ₹1000 ரூபாய் நோட்டுகளின் சட்டபூர்வ நிலையை ரிசர்வ் வங்கி 2016ஆம் ஆண்டில் திரும்பப் பெற்றது. 

இந்திய பொருளாதாரத்தின் நாணயத் தேவையை பூர்த்தி செய்வதற்காக 1934ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி சட்டத்தின் 24(1) பிரிவின் கீழ் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ₹2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது, டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரித்துவிட்ட நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link