தோனியின் பண்ணை வீட்டில் இவ்வளவு வசதிகள் இருக்கா?
தோனியின் பண்ணை வீடு முக்கியமாக இரண்டு விஷயங்களுக்கு பெயர் போனது, ஒன்று பெரிய திறந்த புல்வெளி மற்றொன்று தோனியின் விருப்பமான அனைத்தும் இருப்பது. இவர் வீட்டின் பெரும்பகுதி நிலப்பரப்பானது புல்தரைகள் நிறைந்துள்ளது மற்றும் நிறைய மரங்கள் சூழ்ந்துள்ளது, இந்த இயற்கை தவழும் சூழலை தோனிக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.
தோனியின் மகள் ஜிவா அவரது பண்ணை வீட்டில் புல்தரையில் அமர்ந்து தியானம் செய்வது போல போஸ் கொடுத்துள்ளார். இந்த படங்கள் அழகாகவும், அமைதியை தருவதாகவும் உள்ளது.
இந்த பண்ணை வீட்டில் தோனி தங்குவதன் முக்கியமான நோக்கம் இயற்கையும், வனவிலங்குகளை தான். உலக பல்லிகள் தினத்தன்று தோனியின் மகள் ஜிவா தனது சைக்கிளின் மேல் பச்சோந்தி அமர்ந்திருக்கும் வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டார்.
தோனி அவர் வீட்டு தோட்டத்தில் நாய்களுடன் விளையாடுவார், மேலும் அவரது பண்ணை வீட்டில் உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், அழகான தோட்டம், பசுமை போர்த்தியது போன்ற புல்வெளி போன்றவை அமைந்துள்ளது.
7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தோனியின் பண்ணை வீட்டின் பெயர் கைலாசபதி, இதனை அவர் 2017-ல் காட்டினார். ஓய்வின் பொது தனது பெருமபாலான நேரத்தை மகளுடனும், பண்ணை வீட்டிலுள்ள நாய்கள் மற்றும் குதிரைகளுடன் செலவு செய்கிறார்.
மேலும் இவரது பண்ணை வீட்டில் ஏராளமான கார்களும், பைக்குகளும் உள்ளது. ஹம்மர் எச்2, ஜிஎம்சி சியரா, மிட்சுபிஷி பஜெரோ மற்றும் சிறப்பான தயாரிக்கப்பாக கருதப்படும் ஓபன் 2 டோர் ஸ்கார்பியோ போன்றவை உள்ளது.