என்றென்றும் மார்கண்டேயனாக இருக்க டயட்டில் சேர்க்க வேண்டிய ‘சில’ உணவுகள்!

Tue, 15 Nov 2022-6:55 pm,

கிரீன் டீயில் முதுமையை தடுக்கு தன்மை உள்ளது. இதில் வைட்டமின் ஏ, ஈ, பி5, கே, புரதம், இரும்பு, தாமிரம் மற்றும் மக்னீசியம் நிறைந்துள்ளது. க்ரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிஃபீனால்கள் நிறைந்துள்ளது மற்றும் காஃபின் உள்ளது. ஒரு நாளைக்கு மூன்று கப் கிரீன் டீ சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது செல்கள் சேதத்தை  தடுக்கிறது. எனவே நீண்ட காலத்திற்கு இளமையாக இருக்கலாம்.

ஆலிவ் எண்ணெயில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 சத்துக்கள் நிறைந்துள்ளன.அவை மூளை ஊக்கியாக செயல்படுகின்றன. அவற்றின் ஆக்ஸிஜனேற்றிகள்  முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி, சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

டார்க் சாக்லேட் முதுமையை தடுக்கும் உணவாகவும் செயல்படுகிறது. இதில்  உள்ள ஃபிளாவனாய்டுகள் இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. இது சருமத்திற்கும் ஆரோக்கியமானது. ஆனால் டார்க் சாக்லேட்டை அதிகம் சாப்பிட வேண்டாம்.

பாதாம் மற்றும் வாதுமை பருப்புகள் வைட்டமின் ஈ சத்தின் சிறந்த ஆதாரங்கள் ஆகும். இது தோல் திசுக்களை புதுப்பிப்பதோடு,  புற ஊதா கதிர்களின் பாதிப்பில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. விதைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவற்றை உட்கொள்வதால் சருமம் பொலிவடையும்.

 

மீன் உணவுகள்: சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் டுனாவில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, அவை ஆரோக்கியமான சருமத்திற்கு நன்மை பயக்கும். இந்த ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் சருமத்தின் ஈரப்பதத்திற்கும், வீக்கத்தைக் குறைப்பதற்கும் உதவுகின்றன. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link