Anzac Day நினைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரிட்டன் இளவரசர் வில்லியம்
இளவரசர் வில்லியம் அன்சாக் தின நினைவு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்
பிரிட்டன் இளவரசர் வில்லியம் வைட்ஹாலில் உள்ள கல்லறை நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அன்சாக் தின நினைவேந்தலில் கலந்து கொண்டார்.
(புகைப்படம்: AFP)
"அனைத்து போர்கள், மோதல்கள் மற்றும் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் பணியாற்றி இறந்த" அனைத்து ஆஸ்திரேலியர்கள் மற்றும் நியூசிலாந்து நாட்டினரை நினைவுகூரும் வகையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இந்த நாள் தேசிய நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
(Photograph:Reuters)
அன்சாக் தினம் முதலில் உலகப் போரின் போது துருக்கியின் கலிபோலி தீபகற்பத்தில் நடந்த இரத்தக்களரிப் போரை நினைவுகூர்ந்தது. ஏப்ரல் 25, 1915 இல், ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து இராணுவப் படைகளின் (ANZAC) ஆயிரக்கணக்கான துருப்புக்கள் கலிபோலி தீபகற்பத்தின் குறுகிய கடற்கரையில் நடைபெற்ற் போரில் 130,000 க்கும் அதிகமான உயிர்களை பலி கொடுத்தது. . (Photograph:Reuters)
அடுத்த மாதம் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், வடக்கு பிராந்திய நகரமான டார்வினில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக போராடும் உக்ரைன் மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு அமைதியை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறினார்.