வாழ்க்கை முழுவதும் தோல்வியா... இந்த 6 பழக்கங்கள் தான் காரணம் - மாத்திங்கோங்க மக்களே!

Fri, 10 May 2024-6:10 pm,

எந்த விஷயத்தை எடுத்தாலும் அதனை பின்னாடி பார்த்துக்கொள்ளலாம் என தள்ளிப்போடும் பழக்கம் இருந்தால் அது மிக மிக ஆபத்து. இந்த பழக்கத்தை உடனடியாக கைவிட்டு, கொஞ்சமாக உங்களின் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். 

 

ஒரு முயற்சியை நீங்கள் மேற்கொள்கிறீர்கள் என்றால் அதில் ஒரு கட்டத்தில் ஏதாவது பின்னடைவு ஏற்படுகிறது என்றால் உடனடியாக அதில் இருந்து பின்வாங்காதீர்கள். நீண்ட கால செயல் திட்டத்தை யோசித்து தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்

 

முயற்சித்து பார்ப்பதுதான் வெற்றியின் முதல்படி. அந்த வகையில், ஒரு விஷயத்தை செய்தால் தோல்வியடைந்துவிடுவோமோ என்ற பயத்தில் முயற்சியில் செய்யாமல் இருப்பதும், புதிய விஷயங்களுக்கு தலைக்கொடுக்காமல் பதுங்குவதும் தோல்விக்கே ஈட்டுச் செல்லும். 

 

உங்களின் தனிப்பட்ட வளர்ச்சி குறித்து எப்போதும் யோசியுங்கள். அதைவிடுத்து அன்றாடம் வேலையை மட்டும் கடிவாளம் கட்டிய குதிரையாக பின்பற்றுவது உதவவே உதவாது. எனவே, உங்களின் சுய முன்னேற்றத்திற்கு தினமும் நேரம் ஒதுக்குங்கள்.

மேலும், கடந்த காலத்தை பற்றியே யோசித்து நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பாழாக்கக் கூடாது. கடந்த கால வாழ்க்கையில் நடந்ததை மட்டும் யோசித்துக்கொண்டிருப்பதும் ஆபாயமான பழக்கமாகும். 

 

முக்கியமாக உங்களுக்கு ஏற்படும் தற்காலிக தோல்விகளுக்கும், பின்னடைவுகளுக்கும் வேறு யாரையும் குற்றம் கூறுவதும் ஏற்கத்தக்கது இல்லை. அனைத்திற்கும் முழு பொறுப்பை ஏற்று அதனை பகுப்பாய்வு செய்து தவறுகளை சரிசெய்ய வேண்டும். 

 

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களை கொண்டு எழுதப்பட்டது. எனவே, இந்த தகவலுக்கு Zee News பொறுப்பேற்காது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link