ஆபாச படங்கள் பார்ப்பதை நிறுத்த வேண்டுமா... தினமும் இந்த விஷயங்களை செய்யுங்கள்!

Sun, 12 May 2024-12:30 pm,

முதலில் ஆபாச படங்களை பார்ப்பது ஆரோக்கியமற்றது என்ற சிந்தனையை கொண்டு வாருங்கள். இது மிகவும் முக்கியமானது. 18 வயதை கடந்துவிட்டாலும் ஆபாச படங்கள் என்பது மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகும். எனவே, புகைப்பிடிப்பது, மது அருந்துவது போல் ஆபாச படங்களை பார்ப்பதும் ஒரு ஆரோக்கியமற்ற செயல் என்பதை உறுதியாக நம்புங்கள். இதுவும் அந்த கொடூர உலகில் இருந்து தப்பிக்கும் ஏற்படுத்திக்கொடுக்கும். 

 

உங்களிடம் இருக்கும் ஆபாச படங்கள் அனைத்தும் அழியுங்கள். மொபைல் மற்றும் லேப்டாப்களில் Parental Lock-ஐ போடுவதன் மூலம் இணையத்தை பயன்படுத்தும்போதும் கட்டுப்பாடோடு இருக்கலாம். மேலும், அதிக நேரம் டிஜிட்டல் வாழ்வை மேற்கொள்ளாதீர்கள். 

 

 

ஆபாச படங்களை பார்க்க உங்களை தூண்டும் விஷயங்கள் என்னென்ன என்பதை முதலில் கவனியுங்கள். அது ஒரு பாடலாக இருக்கலாம், காட்சியாக இருக்கலாம், ஒரு நபராக இருக்கலாம் அல்லது ஒரு இடமாக கூட இருக்கலாம். அவற்றை எழுதிவைத்துக்கொள்ளுங்கள். ஆபாச படங்களை பார்க்க தூண்டும் அந்த விஷயங்களை கண்டுபிடித்துவிட்டால் அதில் இருந்து தப்பிக்கும் வழியையும் அடுத்து கண்டுபிடிக்கலாம்.

 

ஆபாச படங்களை பார்க்கும் தூண்டுதல் ஏற்பட்டால் உடனடியாக கவனத்தை திசை திருப்புங்கள். அதனை ஆரோக்கியமான திசை திருப்பலாகவும் இருக்கலாம். உதாரணத்திற்கு புத்தகங்கள் வாசிப்பது, யோகா செய்வது, வீட்டு வேலைகளை செய்வது ஆகியவற்றை செய்யலாம். மன அழுத்தத்தை உணரும் நேரத்தில் கூட ஆபாச படங்கள் பக்கம் கவனத்தை கொண்டு போகாமல் ஆரோக்கியமான முறையில் அதனை கடக்க முயற்சியுங்கள்.

மேலும், அதிக நேரம் தனியாக இருப்பதும் ஆபாச படங்களை பார்க்க தூண்டலாம். எனவே, உங்களின் குடும்பத்தினரோடோ அல்லது நண்பர்களோடோ அதிக நேரத்தை செலவிடங்கள். தனியாக இருக்கும் நேரத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.  உதாரணத்திற்கு அமைதியாக தூங்குவதும் கூட நல்ல முயற்சிதான். 

 

இவை எவையும் உங்களுக்கு கைக்கொடுக்கவில்லை என்றால் உடனடியாக முறையான மருத்துவ ஆலோசனையை பெறுங்கள். மருத்துவரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள தயக்கம் காட்டாதீர்கள். 

 

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன்னரும் கூட நீங்கள் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link