கால்பந்து ஜாம்பவான் மரடோனாவை Mosaic Maradonaவாக மாற்றிய அர்ஜெண்டினா

Fri, 26 Feb 2021-7:55 pm,

கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி இறந்த அர்ஜென்டினா வீரர் மற்றும் உலக புகழ் பெற்ற மரடோனாவின் வண்ணமயமான சுவரோவியத்தை கோமண்டோ மரடோனா என்ற குழுவைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் பிப்ரவரி 25ஆம் தேதியன்று வெளியிட்டார். இது மரடோனாவுக்கு அஞ்சலியாக அமைந்துள்ளது.

மரடோனா தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில் விளையாடிய அர்ஜென்டினாஸ் ஜூனியர்ஸ் ஸ்டேடியத்தின் முன், இந்த வித்தியாசமான முயற்சி நடைபெறுகிறது. கடந்த மூன்று மாதங்களாக இந்த குழு இந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. "நாங்கள் எங்கள் வலியை ஒரு சுவரோவியமாக மாற்றுகிறோம்" என்று பவுலா சோட்டோ மற்றும் கேப்ரியல் பெரேரா ஆகியோருடன் குழுவை உருவாக்கும் லோபஸ் லாச் தெரிவித்தார்.

நீடித்து நிலைத்து நிற்கக்கூடியவை மற்றும் சரிசெய்ய எளிதானவை இந்த டைல்ஸ்கள்.  சிறிய ஓடுகளால் ஆன மொசைக் வடிவமைப்பு இது. மரடோனா விளையாடிய அணிகளில் ஒன்றின் ஜெர்சியில் புன்னகைக்கிறார்.  

அந்த நகரில் வசிப்பவர்களுக்கும் மரடோனா டைல்ஸ் வடிவமைப்பில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மொசைக்ஸில் இறுதிப் பகுதிகளைச் சேர்க்க அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மரடோனா ஒரு தேசிய விளையாட்டு வீரர். சர்வதேச புகழ் பெற்றவர். "மரடோனா அர்ஜென்டினாவின் அடையாளம், தேசத்தின் முத்திரை, நமது டி.என்.ஏவின் ஒரு பகுதி, நமது ரத்தத்தின் ஒரு பகுதி" என்று லோபஸ் லாச் கூறுகிறார்

 

1986 உலகக் கோப்பையை வெல்ல அர்ஜென்டினா அணிக்கு உறுதுணையாக இருந்தவர். கடந்த நவம்பர் மாதம் இறந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக வந்தனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link