ஸ்ரீராம நவமி: வாழ்க்கையில் வெற்றியும் அமைதியும் கிடைக்க... ராசிக்கு ஏற்ற பரிகாரங்கள்!

Mon, 15 Apr 2024-3:15 pm,

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசிக்கு சிவப்பு நிறம் உகந்ததாக கருதப்படுகிறது. ராம நவமி அன்று துர்கா தேவிக்கு செம்பருத்திப் பூவைச் சமர்ப்பிக்கலாம். வாழ்க்கையில் சந்தோஷம் குறைவில்லாமல் இருக்கும்.

ரிஷபத்தை ஆளும் கிரகம் சுக்கிரன். வெள்ளை நிறம் ரிஷப ராசியின் மங்களகரமான நிறமாக கருதப்படுகிறது. ராமநவமியின் துர்கா தேவிக்கு மல்லிகை, முல்லை போன்ற வெள்ளை நிற மலர்களை அர்ப்பணிக்கவும். வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரும்.

 

மிதுன ராசியை ஆளும் கிரகம் புதன். ராமநவமியின் போது துர்கா தேவியை மகிழ்விக்க,  மஞ்சள் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். மிதுன ராசியின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள். இது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரும்.

கடகத்தை ஆளும் கிரகம் சந்திரன். கடக ராசிக்காரர்களின் உகந்த நிறமும் வெண்மையானது, எனவே ராமநவமியின் போது துர்கையின் ஆசீர்வாதத்தைப் பெற வெள்ளை நிற பூக்களை அர்ப்பணிக்க வேண்டும்.  இது உங்கள் வாழ்க்கையில் வெற்றிகளை கொண்டு வரும்.

சிம்ம ராசியை ஆளும் கிரகங்களின் சூரியன். சிம்ம ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட நிறங்கள் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு. எனவே மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் சாமந்தி, சூரியகாந்தி போன்ற பூக்களை துர்கா தேவிக்கு அர்ச்சனை செய்யலாம். இதனால் நிதி நிலைமை வலுவாகும்.

கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த ராசிக்காரர்களின் உகந்த மங்கள நிறமும் மஞ்சள் நிறம் என்பதால், இந்த நவராத்திரியில் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற, ராமநவமியின் துர்கைக்கு கண்டிப்பாக மஞ்சள் பூக்களை அர்ப்பணிக்கவும்.

துலாம் ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன். எனவே, துலாம் ராசிக்காரர்களின் உகந்த நிறம் வெள்ளை, எனவே நீங்கள் இந்த நவராத்திரியில் துர்கா தேவிக்கு வெள்ளை தாமரையை அர்ப்பணிக்க வேண்டும். இதனால்,  தேவியின் ஆசீர்வாதம் உறுதியாக கிடைக்கும்.

விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். எனவே விருச்சிக ராசிக்காரர்களின் மங்கள நிறம் சிவப்பு, எனவே ராமநவமியின் போது துர்கா தேவிக்கு சிவப்பு நிற ரோஜா அல்லது செம்பருத்திப் பூவை அர்ச்சனை செய்ய வேண்டும்.

தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இவர்களுக்கு உகந்த மங்கள நிறம் மஞ்சள், எனவே ராமநவமியின் போது உங்கள் விருப்பங்களை நிறைவேற, துர்கா தேவிக்கு கண்டிப்பாக மஞ்சள் பூவை அர்ப்பணிக்கவும்.

மகர ராசியை ஆளும் கிரகம் சனிதேவர். எனவே ராமநவமியின் போது வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்க, நீங்கள் துர்கை அன்னைக்கு நீல நிற மலர்களை அர்ப்பணிக்க வேண்டும். அன்னைக்கு நீல நிற சங்கு புஷ்ப மலர்களால் அர்ச்சனை செய்யலாம்.

கும்பத்தை ஆளும் கிரகம் சனி. எனவே கும்ப ராசியினரின் அதிர்ஷ்ட நிறம் நீலம். கும்ப ராசிக்காரர்களும் ராமநவமியின் போது அன்னை தேவிக்கு நீல நிற சங்கு புஷ்ப மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

மீன ராசியின் அதிபதி குரு மற்றும் . எனவே, ராசியின் மங்கள நிறம் மஞ்சள். ராமநவமியின் போது அன்னையின் சிறப்பு அருளைப் பெற, மீன ராசிக்காரர்கள் துர்கா தேவிக்கு மஞ்சள் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link