Astro Traits: சவால்களை கண்டு அஞ்சாத... உறுதியான மனம் கொண்ட ராசிகள் எவை..!!

Thu, 11 Jul 2024-12:10 pm,

ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 12 ராசிகளையும் நீர், நெருப்பு, நிலம், காற்று என நான்கு வகை பிரிக்கப்பட்டுள்ளன. மேலும், சர ராசி, ஸ்திர ராசி, உபய ராசி எனவும் ராசிகள் பிரிக்கப்பட்டுள்ளது. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு பகவான், சுக்கிரன், சனி, ஆகிய கிரகங்கள் ஆட்சி செய்கின்றன. அதற்கேற்ப அவர்களின் குண நலன்கள் இருக்கின்றன.

வாழ்க்கையில் சிலர் இலக்கை அடைய எதையும் செய்யும் பலர் உள்ளனர். வாழ்க்கையில் தான் சாதிக்க விரும்புவதை அடைய எந்தச் சிரமத்தையும் எதிர்க்கத் தயாராக இருக்கிறார்கள். சவால்களுக்கு அஞ்சாதவர்களாகக் கருதப்படும் சில ராசிகள் பற்றி ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க வேண்டும் என்ற ஆர்வம் நிறைந்தவர்கள். அந்த ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். மேஷ ராசிக்காரர்கள் பக்காவாக திட்டத்தையும் தீட்டி வேலை செய்து முடிக்க விரும்புவார்கள். இந்த ராசிக்காரர்களின் தனிச்சிறப்பு என்னவென்றால், அவர்கள் வாழ்க்கையில் தான் சாதிக்க விரும்புவதை அடைவதற்காக, மிகவும் கடினமாக உழைக்கும் திறன் பெற்றவர்கள். அதே சமயம் எதையும் சாதிக்க  உத்திகளை வகுப்பதிலும் வல்லவர். 

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். அவர்களின் மனதில் என்ன எண்ண ஓட்டம் உள்ளது என்பதை யாராலும் யூகிக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் தங்கள், திட்டங்களையும் உத்திகளையும், வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைத்துக் கொள்ள் விரும்புகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் என்ன செய்தாலும், யாருடம் பழகினாலும், = தங்கள் இலக்குகளை நோக்கியே கவனம் செலுத்துவார்கள். தங்கள் கனவுகளை எப்படி நிறைவேற்றுவது என்பது மட்டுமே அவர்களின் மனதில் எப்போதும் இருக்கும். இதனை நிறைவேற்றுவதற்கான மன வலிமையும் இவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

சிம்ம ராசியின் அதிபதி சூரிய பகவான். சூரிய பகவான் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் நிலையில், சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல தலைமைப் பண்பு இருக்கும். மேலும், சிம்ம ராசிக்காரர்கள் தடைகள், சவால்களை கண்டு அஞ்சாமல், தைரியமானவர்களாகவும், ஆர்வமுள்ளவர்களாகவும் இருப்பதால், எந்தச் சவாலையும் சமாளிக்கத் தயாராக உள்ளனர். அவர்கள் சவால்களை சமாளித்து எப்படியாவது தங்கள் இலக்குகளை அடைகிறார்கள்.

விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். விருச்சிக ராசிக்காரர்கள் எதைச் சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்த உடன், அதற்கான நடைமுறை அணுகுமுறையை ஏற்படுத்தி, அதை அடைவதற்கான உறுதியான உத்தியை உருவாக்குவதில் வல்லவர்கள். விருச்சிக ராசிக்காரர்கள் நடைமுறைக்கு சாத்தியமான விஷயங்களை ஆராய்ந்து அதற்கு ஏற்ப உத்திகளை ஏற்படுத்துவதில் வல்லவர்கள். விருச்சிக ராசிக்காரர்கள் தங்களுடைய இந்த குணத்தால் எவருடைய மனதையும் வெல்லும் திறன் பெற்றவர்கள்.

கும்ப ராசிக்கு அதிபதி சனிதேவர். கும்ப ராசிக்காரர்கள் மன தைரியம் நிறைந்தவர்கள். இந்த ராசிக்காரர்கள் ஒன்றை சாதிக்க நினைத்தால், அதை யாராலும் தடுக்க முடியாது. இலக்கை அடைந்த பிறகே, அவர்கள் மனம் நிம்மதி அடையும். இலட்சியத்தை நிறைவேற்ற, கடினமாக உழைக்க அஞ்சாதவர்கள். தடைகள் இவர்கள் மன உறுதியை குலைக்க முடியாது.  தாராள மனப்பான்மை கொண்ட கும்ப ராசியினருக்கு நண்பர்கள் அதிகம் கிடைப்பார்கள். சமுதாயத்தில் ஒரு தனி முத்திரை பதிப்பார்கள்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link