Astro Traits: நளபாக சமையல் திறனால் மனங்களை வெல்லும் ‘3’ ராசிகள்..!!

Wed, 12 Oct 2022-9:07 pm,

குறிப்பிட்ட 3 ராசிகளை சேர்ந்த ஆண்களும் பெண்களும் நளபாகம் போன்று சிறப்பாக சமைப்பதோடு மட்டுமின்றி, சமைத்த சுவையான உணவை பரிமாறுவதிலும் சிறந்தவர்கள். அறுசுவை உணவை அளித்து மக்களின் மனதை எளிதில் வெல்வார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

மிதுனம் ராசிக்காரர்களுக்கு சமைப்பது, பரிமாறுவது, சாப்பிடுவது ஆகிய மூன்றையும் மிகவும் விரும்பி செய்வார்கள். சமையலறையை மிகவும் ரசிக்கிறார்கள் என்று சொல்லலாம். அவர்கள் புதிய உணவுகளை முயற்சிக்க விரும்புகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு அறுசுவை உணவை பரிமாறுவதன் மூலம் அவர்களின் கோபத்தை எளிதில் சாந்தப்படுத்துவார்கள். மேலும் இந்த ராசிக்காரர்கள் தைரியமானவர்கள் என்பதோடு ரிஸ்க் எடுக்க பயப்பட மாட்டார்கள்.

கன்னி ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள், என்ராலும், மிகவும் புத்திசாலிகள். இவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்கிறார்கள். சமையல் திறன் மூலம் மக்கள் மனதை எளிதில் வெல்வார்கள். இவர்கள் சமைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள்  என்பதோடு, மிகவும் அன்புடன் உணவு பரிமாறும் உள்ளதால், அனைவரும் இவர்களை பெரிதும் வெல்வார்கள்.

துலாம் ராசிக்காரர்களும் சமையலில் வல்லவர்கள். இவர்கள் அமைதியான மற்றும் சீரான வாழ்க்கையை விரும்புகிறார்கள். கொஞ்சம்  மனஅழுத்தம் ஏற்பட்டால் கூட, சமைப்பதன் மூலம் மன அழுத்தத்தை pஓக்கி விடுவார்கள். சமையலில் ஈடுபடும் போது இவர்களுக்கு, சகல துக்கங்களும் மறந்து விடும் எனலாம்.  சமைக்கும் வேலையை இவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்கிறார்கள். இவர்கள் பல்வேறு வகையான உணவு வகைகளை எப்படி செய்வது என்பதை மிக விரைவாகக் கற்றுக்கொள்கின்றனர்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link