Astro Traits: மிகவும் இளகிய மனம் கொண்ட 5 ராசிக்காரர்கள்
மேஷ ராசியினர், எவ்வளவு கோபமாக இருந்தாலும், தனக்கு எதிரில் இருப்பவர் அழுவதை கண்டால், அவர்கள் மனம் இளகி விடும். மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடிய மனநிலை கொண்ட இவர்கள், அனைவரையும் நேசிப்பவர்களாக இருக்கிறார்கள்.
கடக ராசிக்காரர்கள் யாரும் மீதும் அவ்வளவு சீக்கிரம் கோபப்பட மாட்டார்கள். மிகவும் இளகிய மனம் படைத்த இவர்கள், எத்தனை பெரிய தவறு செய்திருந்தாலும், அவர்கள் மன்னிப்பு கேட்டால் இவர்கள் மனம் இளகி விடும். மிகுந்த இரக்க குணம் கொண்டவர்கள் இவர்கள்.
கன்னி ராசிக்காரர்களின் சமூக சிந்தனை அதிகம் உண்டு. மற்றவர்களின் துயரங்களைக் கண்டு மனம் துடிப்பவர்கள். இவர்களிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று கூறும் பழக்கம் இல்லை.
துலாம் ராசிக்காரர்களும் மிகவும் இளகிய மனம் படைத்தவர்கள். மற்றவர்களின் முகத்தை பார்த்து அவர்களது மனதை புரிந்து கொண்டு தேவையானதை செய்யும் மென்மையான மனம் படைத்தவர்கள் இவர்கள்.
மீன ராசியினர் மனிதாபிமானம் மிக்கவர்கள். மற்ற கண்ணீரைக் கண்டால், விரைந்து சென்று அதை துடைக்கும் மனோபாவம் கொண்டவர்கள். தன்னை சுற்றி இருக்கும் அனைவரையும் நேசிக்கும் பண்பு பெற்றவர்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.