மாத ராசிபலன்: ஜூலை மாதம் யாருக்கு சூப்பர்? யாருக்கு சுமார்..... முழு ராசிபலன் இதோ

Sun, 30 Jun 2024-4:40 pm,

மேஷம்: குடும்பத்தில் ஆன்மீக காரியங்கள் நடைபெறலாம். நண்பரின் உதவியால் வருமானம் கூடும். தொழில் நிலை மேம்படும். குடும்பத்தினரின் ஆதரவையும் பெறுவீர்கள். தொழில் ரீதியாக செய்யும் பயணங்கள் லாபகரமாக இருக்கும்.

ரிஷபம்: ஜூலை மாதம் தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பணியிடத்திலும் மாற்றம் ஏற்படலாம். அதிக உழைப்பு இருக்கும். வருமானம் அதிகரிக்கும், ஆனால் நீங்கள் குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டியிருக்கும்.

 

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். லாப வாய்ப்புகள் அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். முன்னேற்றம் ஏற்படும். வேலை வாய்ப்பு அதிகரிக்கும். நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும். 

கடகம்: வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கல்விப் பணி மகிழ்ச்சியான பலனைத் தரும். கல்வி பணிக்காக வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டு. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவை பெறுவீர்கள். 

சிம்மம்: ஜூலை மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். எழுதுதல் போன்ற அறிவுசார் வேலைகள் மூலம் நீங்கள் மரியாதை பெறலாம். பண வரவு அதிகமாகும். வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான பாதைகள் அமையும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு வரிமானம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் மாற்றம் ஏற்படலாம். நீங்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம். தாயின் அனுகூலமான ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும்.

துலாம்: துலா ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆனால் பணியிட மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயணச் செலவுகள் அதிகரிக்கலாம். நண்பரின் உதவியால் வருமானத்தைப் பெருக்கும் வழி உருவாகும். செலவுகள் அதிகமாகவே இருக்கும்.

விருச்சிகம்: உங்கள் தொழிலை விரிவுபடுத்த சகோதர சகோதரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் தந்தையிடமிருந்தும் பணம் பெறலாம். கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் உள்ளவர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்கள். கல்வி பணிக்காக சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். பணியிடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாகும். 

 

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கல்வி அல்லது அறிவுசார் வேலைகளில் நீங்கள் மரியாதை பெறலாம். ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். நண்பரின் உதவியால் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 

கும்பம்: கல்விப் பணிகளில் வெற்றி கிடைக்கும். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். செலவுகள் கூடும். பணியின் அளவு கூடும். வியாபாரத்தில் சிரமங்கள் இருக்கலாம், ஆனால் லாபத்திற்கான வாய்ப்புகளும் இருக்கும்.

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு உள்ளது. தொழில் விஷயமாக வெளியூர் பயணம் செல்லலாம். பயணங்களால் நன்மை உண்டாகும். சில மூதாதையர் சொத்துக்களால் செல்வம் பெறலாம். செலவுகள் கூடும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link